×
الفاتحةவசனம் 7

அல்-முக்தஸர்

صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ ﴿٧﴾

அந்த நேர்வழி உன் அடியார்களில் நீ வழிகாட்டி அருள்புரிந்த நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், நல்லவர்கள் ஆகியோர் சென்ற வழி. அவர்களே சிறந்த தோழர்கள். சத்தியத்தை அறிந்து அதனைப் பின்பற்றாமல் உன்னுடைய கோபத்திற்கு ஆளான யூதர்களின் வழி அல்ல அது; சத்தியத்தை தேடுவதிலும் அதனை அடைவதிலும் அலட்சியமாக இருந்ததால் அதனை விட்டு வழிதவறிய கிறித்தவர்களின் வழியுமல்ல அது.