×
البقرةவசனம் 1

அல்-முக்தஸர்

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ الٓمٓ ﴿١﴾

الم - குர்ஆனின் சில அத்தியாயங்கள் இவ்வகையான எழுத்துக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை அறபு மொழியிலுள்ள எழுத்துக்களாகும். இவ்வாறு அலிஃப், பா, தா என்று தனித்து இடம்பெறும்போது அவற்றுக்குப் பொருள் கிடையாது. ஆனால், குர்ஆனில் எதுவும் நோக்கமின்றிக் கூறப்பட்டிருக்காது என்பதால் இவ்வாறான எழுத்துகள் இடம்பெறுவதற்கும் ஒரு நோக்கம் உண்டு. அறபிகள் பேசுவதற்குப் பயன்படுத்துகிற அவர்களுக்குத் தெரிந்த அதே எழுத்துகளின் மூலம் அமைந்த குர்ஆனைக் கொண்டு சவால் விடுவதே அந்த நோக்கமாகும். அதனால்தான் பெரும்பாலும் இந்த எழுத்துகளைக் குறிப்பிட்ட பின்னர் குர்ஆனைப் பற்றியே பேசப்படுகிறது. இந்த அத்தியாயத்திலும் அவ்வாறே வந்துள்ளது.