×
يونسவசனம் 107

அல்-முக்தஸர்

وَإِن يَمْسَسْكَ ٱللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَ ۖ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهِۦ ۚ يُصِيبُ بِهِۦ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۚ وَهُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ ﴿١٠٧﴾

தூதரே!- அல்லாஹ் உமக்கு எதேனும் துன்பத்தை அளித்து அது நீங்க வேண்டுமென நீர் வேண்டினால் அவனைத் தவிர யாராலும் அதனை நீக்க முடியாது. அவன் உமக்கு வளமான வாழ்க்கையை நாடினால் அவனது அருளை ஒருவராலும் தடுக்க முடியாது. அவன் தன் அடியார்களில் தான் நாடுவோருக்கு தன் அருளை வழங்குகிறான். அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக் கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.