அல்-முக்தஸர்
قُلْ يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَكُمُ ٱلْحَقُّ مِن رَّبِّكُمْ ۖ فَمَنِ ٱهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِى لِنَفْسِهِۦ ۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۖ وَمَآ أَنَا۠ عَلَيْكُم بِوَكِيلٍ ﴿١٠٨﴾
தூதரே!- நீர் கூறுவீராக: “மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட குர்ஆன் உங்களிடம் வந்துள்ளது. யார் நேர்வழி பெற்று அதன் மீது நம்பிக்கை கொண்டாரோ அதன் பயன் அவருக்கே. ஏனெனில் அடியார்களின் கீழ்ப்படிதலை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். யாரேனும் வழிதவறினால் அதன் கேடு அவரை மட்டுமே சாரும். அடியார்களின் பாவங்களால் அல்லாஹ்வுக்கு எந்த தீங்கும் ஏற்படப் போவதில்லை. நான் உங்களின் செயல்களைக் கணக்கிட்டு பாதுகாப்பவன் அல்ல.”