×
يونسவசனம் 27

அல்-முக்தஸர்

وَٱلَّذِينَ كَسَبُوا۟ ٱلسَّيِّـَٔاتِ جَزَآءُ سَيِّئَةٍۭ بِمِثْلِهَا وَتَرْهَقُهُمْ ذِلَّةٌ ۖ مَّا لَهُم مِّنَ ٱللَّهِ مِنْ عَاصِمٍ ۖ كَأَنَّمَآ أُغْشِيَتْ وُجُوهُهُمْ قِطَعًا مِّنَ ٱلَّيْلِ مُظْلِمًا ۚ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ ﴿٢٧﴾

அல்லாஹ்வை நிராகரித்தல், பாவங்கள் புரிதல் போன்ற தீயசெயல்களில் ஈடுபடுபவர்கள் மறுமை நாளில் அவர்கள் செய்த தீமைக்கேற்ப தண்டிக்கப்படுவார்கள். அவர்களின் முகங்களில் இழிவும் அவமானமும் படர்ந்திருக்கும். அல்லாஹ்வின் வேதனை அவர்கள் மீது இறங்கிவிட்டால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது. அவர்களின் முகங்களைச் சூழ்ந்திருக்கும் நரக நெருப்பின் புகையாலும் கருமையாலும் இருளான இரவின் கருமையால் அவை மூடப்பட்டுள்ளதைப் போல் தோன்றும். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் நரகவாசிகளாவர். அங்கு என்றென்றும் வீழ்ந்துகிடப்பார்கள்.