×
يونسவசனம் 28

அல்-முக்தஸர்

وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا۟ مَكَانَكُمْ أَنتُمْ وَشُرَكَآؤُكُمْ ۚ فَزَيَّلْنَا بَيْنَهُمْ ۖ وَقَالَ شُرَكَآؤُهُم مَّا كُنتُمْ إِيَّانَا تَعْبُدُونَ ﴿٢٨﴾

தூதரே!- நாம் படைப்புகள் அனைத்தையும் ஒன்று திரட்டும் மறுமை நாளை நினைவுகூர்வீராக. பின்னர் உலகில் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியவர்களிடம் நாம் கூறுவோம்: “இணைவைப்பாளர்களே! நீங்களும் அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கிய தெய்வங்களும் உங்களின் இடத்திலேயே நில்லுங்கள். நாம் வணங்கியவர்களுக்கும் வணங்கப்பட்டவர்களுக்குமிடையே பிரிவினை ஏற்படுத்தி விடுவோம். வணங்கப்பட்டவர்கள் தங்களை வணங்கியவர்களை நோக்கி, “நீங்கள் உலகில் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை” என்று கூறி அவர்களை விட்டும் விலகி விடுவார்கள்.