×
يونسவசனம் 29

அல்-முக்தஸர்

فَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًۢا بَيْنَنَا وَبَيْنَكُمْ إِن كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغَـٰفِلِينَ ﴿٢٩﴾

அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்கிய எல்லா தெய்வங்களும், “நீங்கள் எங்களை வணங்கியதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் எங்களை வணங்குமாறு உங்களுக்குக் கட்டளையிடவும் இல்லை. நாங்கள் உங்களின் வணக்கத்தையே அறியாதிருந்தோம் என்பதற்கு சாட்சிகூற அல்லாஹ்வே போதுமானவன்” என்று கூறி அவர்களை விட்டும் நீங்கி விடுவார்கள்.