அல்-முக்தஸர்
مَتَـٰعٌ فِى ٱلدُّنْيَا ثُمَّ إِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِيقُهُمُ ٱلْعَذَابَ ٱلشَّدِيدَ بِمَا كَانُوا۟ يَكْفُرُونَ ﴿٧٠﴾
அவர்கள் அனுபவிக்கும் இவ்வுலக இன்பங்களைக் கொண்டு அவர்கள் ஏமாந்துவிட வேண்டாம். அவை அழியக்கூடிய அற்ப இன்பமே. பின்னர் மறுமை நாளில் நம்மிடமே அவர்கள் திரும்பிவர வேண்டும். பின்னர், அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் தூதரை பொய்யர் என்று கூறியதனாலும் நாம் அவர்களை கடுமையான வேதனையை அனுபவிக்கச் செய்வோம்.