×
يونسவசனம் 71

அல்-முக்தஸர்

وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ نُوحٍ إِذْ قَالَ لِقَوْمِهِۦ يَـٰقَوْمِ إِن كَانَ كَبُرَ عَلَيْكُم مَّقَامِى وَتَذْكِيرِى بِـَٔايَـٰتِ ٱللَّهِ فَعَلَى ٱللَّهِ تَوَكَّلْتُ فَأَجْمِعُوٓا۟ أَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا يَكُنْ أَمْرُكُمْ عَلَيْكُمْ غُمَّةً ثُمَّ ٱقْضُوٓا۟ إِلَىَّ وَلَا تُنظِرُونِ ﴿٧١﴾

தூதரே!- நிராகரிக்கும் இந்த இணைவைப்பாளர்களுக்கு நூஹின் செய்தியை எடுத்துரைப்பீராக. அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “என் சமூகமே, நான் உங்களிடையே இருப்பதும் அல்லாஹ்வின் சான்றுகளைக் கொண்டு உங்களை அறிவுறுத்துவதும் உங்களுக்குப் பாரமாகத் தோன்றி, நீங்கள் என்னைக் கொல்ல நாடினால் உங்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பதற்கு நான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். எனவே உறுதியான திட்டம் தீட்டி என்னை அழிக்க முடிவுசெய்யுங்கள். அதற்கு உங்களின் தெய்வங்களையும் உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களின் திட்டம் புரியாத இரகசியமாக இருக்க வேண்டாம். என்னை கொலை செய்ய திட்டம் தீட்டிய பிறகு அதனைச் செயல்படுத்துங்கள். ஒரு வினாடி கூட எனக்கு அவகாசம் அளிக்க வேண்டாம்.