×
يونسவசனம் 89

அல்-முக்தஸர்

قَالَ قَدْ أُجِيبَت دَّعْوَتُكُمَا فَٱسْتَقِيمَا وَلَا تَتَّبِعَآنِّ سَبِيلَ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ ﴿٨٩﴾

அல்லாஹ் கூறினான்: -மூஸா மற்றும் ஹாரூனே!- பிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தின் தலைவர்களுக்கு எதிராக நீங்கள் செய்த பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது. உங்களின் மார்க்கத்தில் உறுதியாக இருங்கள். அதிலிருந்து நெறிபிறழ்ந்து சத்திய பாதையை அறியாத மூடர்களின் பாதையைப் பின்பற்றி விடாதீர்கள்.