×
يونسவசனம் 90

அல்-முக்தஸர்

وَجَـٰوَزْنَا بِبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُۥ بَغْيًا وَعَدْوًا ۖ حَتَّىٰٓ إِذَآ أَدْرَكَهُ ٱلْغَرَقُ قَالَ ءَامَنتُ أَنَّهُۥ لَآ إِلَـٰهَ إِلَّا ٱلَّذِىٓ ءَامَنَتْ بِهِۦ بَنُوٓا۟ إِسْرَٰٓءِيلَ وَأَنَا۠ مِنَ ٱلْمُسْلِمِينَ ﴿٩٠﴾

கடலைப் பிளந்து இஸ்ராயீலின் மக்களுக்கு அதனைக் கடப்பதை நாம் எளிதாக்கினோம். அவர்கள் பாதுகாப்பாக அதனைக் கடந்தார்கள். பிர்அவ்னும் அவனுடைய படைகளும் அநியாயமாகவும் வரம்பு மீறியும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். கடல் அவனை மூடி, மூழ்கடித்து, தப்புவதில் விரக்தியடைந்து அவன் கூறினான்: “இஸ்ராயீலின் மக்கள் யார் மீது நம்பிக்கை கொண்டார்களோ அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான எந்த இறைவனும் இல்லை என்று நான் நம்பிக்கை கொள்கிறேன். கட்டளைகளை கொண்டு நான் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவர்களில் ஒருவனாகி விட்டேன்.”