×
هودவசனம் 28

அல்-முக்தஸர்

قَالَ يَـٰقَوْمِ أَرَءَيْتُمْ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّى وَءَاتَىٰنِى رَحْمَةً مِّنْ عِندِهِۦ فَعُمِّيَتْ عَلَيْكُمْ أَنُلْزِمُكُمُوهَا وَأَنتُمْ لَهَا كَـٰرِهُونَ ﴿٢٨﴾

நூஹ் அவர்களிடம் கூறினார்: “என் சமூகமே! என் நம்பகத் தன்மைக்கு சாட்சி கூறி, என்னை உண்மைப்படுத்துவதை உங்கள் மீது கடமையாக்கும் என் இறைவனிடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் மீது நானிருந்து, அவன் தன் புறத்திலிருந்து எனக்கு தூதுத்துவம், நபித்துவம் என்னும் அருட்கொடையையும் வழங்கியிருக்க, உங்களின் அறியாமையினால் உங்களுக்கு அது மறைக்கப்பட்டதாக இருந்தால் நாம் உங்களை நம்பிக்கைகொள்ளும்படி, உங்களின் உள்ளங்களில் அதனை வலுக்கட்டாயமாக நுழைவித்து கட்டாயப்படுத்தவா முடியும்? நாம் அதற்கு சக்தி பெற்றவர்கள் அல்ல. அல்லாஹ்வே ஈமான் கொள்ளும் பாக்கியத்தை அளிக்கிறான்.”