அல்-முக்தஸர்
وَيَـٰقَوْمِ لَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مَالًا ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَى ٱللَّهِ ۚ وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ ۚ إِنَّهُم مُّلَـٰقُوا۟ رَبِّهِمْ وَلَـٰكِنِّىٓ أَرَىٰكُمْ قَوْمًا تَجْهَلُونَ ﴿٢٩﴾
என் சமூகமே! தூதை எடுத்துரைக்கும் பணிக்கு நான் உங்களிடம் எந்தப் பொருளையும் கேட்கவில்லை. எனது கூலி அல்லாஹ்விடமே உள்ளது. நீங்கள் விரட்டி விடுமாறு வேண்டும் நம்பிக்கை கொண்ட ஏழைகளை நான் எனது அவையிலிருந்து விரட்டுபவனல்ல. நிச்சயமாக அவர்கள் மறுமை நாளில் தங்கள் இறைவனை சந்திக்கக் கூடியவர்கள். அவர்களின் நம்பிக்கைக்கு அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான். ஆனால் நம்பிக்கை கொண்ட ஏழைகளை விரட்டுமாறு கோரும் உங்களை இந்த அழைப்பின் யதார்த்தத்தை புரியாத மக்களாகவே நான் காண்கிறேன்.