அல்-முக்தஸர்
إِنِّى تَوَكَّلْتُ عَلَى ٱللَّهِ رَبِّى وَرَبِّكُم ۚ مَّا مِن دَآبَّةٍ إِلَّا هُوَ ءَاخِذٌۢ بِنَاصِيَتِهَآ ۚ إِنَّ رَبِّى عَلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ ﴿٥٦﴾
நான் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து என் விஷயத்தில் முழுமையாக அவனையே சார்ந்துள்ளேன். அவன்தான் என் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். இந்த பூமியின் மேற்பரப்பில் ஊர்ந்து திரியும் ஒவ்வொன்றும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அவன் தான் நாடியவாறு அவற்றை மாற்றுகிறான். நிச்சயமாக என் இறைவன் நீதியில் நிலைத்திருப்பவன்.அவன் உங்களை என் மீது சாட்டிவிட மாட்டான். ஏனெனில் நிச்சயமாக நான் சத்தியத்திலும் நீங்கள் அசத்தியத்திலும் இருக்கின்றீர்கள்.