×
هودவசனம் 57

அல்-முக்தஸர்

فَإِن تَوَلَّوْا۟ فَقَدْ أَبْلَغْتُكُم مَّآ أُرْسِلْتُ بِهِۦٓ إِلَيْكُمْ ۚ وَيَسْتَخْلِفُ رَبِّى قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّونَهُۥ شَيْـًٔا ۚ إِنَّ رَبِّى عَلَىٰ كُلِّ شَىْءٍ حَفِيظٌ ﴿٥٧﴾

நான் கொண்டு வந்ததை நீங்கள் புறக்கணித்தால் எடுத்துரைப்பது மட்டுமே என் மீதுள்ள கடமையாகும். அல்லாஹ் எனக்கு எந்த தூதுப் பணியை அளித்து உங்களுக்கு எடுத்துரைக்கும்படி கட்டளையிட்டானோ அதனை நான் உங்களுக்கு முழுமையாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்கு எதிராக ஆதாரம் நிலைபெற்று விட்டது. என் இறைவன் விரைவில் உங்களை அழித்திடுவான். அவன் உங்களின் இடத்தில் வேறொரு சமூகத்தைக் கொண்டு வருவான். நீங்கள் உங்களின் நிராகரிப்பு, புறக்கணிப்பு மூலம் அல்லாஹ்வுக்கு சிறிய, பெரிய எந்த தீங்கையும் அளித்துவிட முடியாது. ஏனெனில் அவன் தன் அடியார்களை விட்டும் தேவையற்றவன். என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாவான். எனக்கெதிராக நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளிலிருந்து அவனே என்னைப் பாதுகாப்பான்.