×
هودவசனம் 61

அல்-முக்தஸர்

وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَـٰلِحًا ۚ قَالَ يَـٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُۥ ۖ هُوَ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَٱسْتَعْمَرَكُمْ فِيهَا فَٱسْتَغْفِرُوهُ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ ۚ إِنَّ رَبِّى قَرِيبٌ مُّجِيبٌ ﴿٦١﴾

ஸமூத் சமூகத்தின்பால் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமூகமே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. அவனே உங்களின் தந்தை ஆதமை பூமியின் மண்ணிலிருந்து படைத்ததன் மூலம் உங்களை மண்ணிலிருந்து படைத்தான். உங்களை அதில் வசிப்போராக்கினான். எனவே அவனிடமே மன்னிப்பைக் கோருங்கள். பின்பு நற்காரியங்கள் செய்து தீமைகளைத் தவிர்த்து அவனிடமே மீண்டுவாருங்கள். நிச்சயமாக என் இறைவன் அவனை மட்டுமே வணங்கக்கூடியவர்களுக்கு நெருக்கமானவனாகவும் அவனிடம் பிரார்த்திப்பவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளிக்கக்கூடியவனாகவும் இருக்கின்றான்.