×
هودவசனம் 62

அல்-முக்தஸர்

قَالُوا۟ يَـٰصَـٰلِحُ قَدْ كُنتَ فِينَا مَرْجُوًّا قَبْلَ هَـٰذَآ ۖ أَتَنْهَىٰنَآ أَن نَّعْبُدَ مَا يَعْبُدُ ءَابَآؤُنَا وَإِنَّنَا لَفِى شَكٍّ مِّمَّا تَدْعُونَآ إِلَيْهِ مُرِيبٍ ﴿٦٢﴾

அவருடைய சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “ஸாலிஹே! உமது இந்த அழைப்பிற்கு முன்னால் எங்களிடையே உயர்ந்த அந்தஸ்தை நீர் பெற்றிருந்தீர். நீர் உபதேசம் செய்து, ஆலோசனை வழங்கும் அறிவாளியாக, வருவீர் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். -ஸாலிஹே!- எங்கள் முன்னோர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா? அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்று நீர் அழைக்கும் விஷயத்தில் நீர் அல்லாஹ்வின் மீது பொய் கூறுவதாக உம்மைச் சந்தேகிக்கும் அளவுக்கு, நிச்சயமாக நாங்கள் சந்தேகத்தில் இருக்கின்றோம்.”