×
يوسفவசனம் 18

அல்-முக்தஸர்

وَجَآءُو عَلَىٰ قَمِيصِهِۦ بِدَمٍ كَذِبٍ ۚ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًا ۖ فَصَبْرٌ جَمِيلٌ ۖ وَٱللَّهُ ٱلْمُسْتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ ﴿١٨﴾

தந்திரம் செய்து தங்களின் செய்தியை உறுதிப்படுத்தினார்கள். ஓநாய் தின்றதன் அடையாளம் என்று வேறு இரத்தத்தில் தேய்த்து எடுக்கப்பட்ட யூஸுஃபின் சட்டையைக் கொண்டு வந்தார்கள். கிழியாத சட்டையைக் கண்ட யஃகூப் அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார். அவர்களிடம் கூறினார்: “நீங்கள் கூறுவது போலல்ல விடயம். மாறாக உங்களின் மனம் நீங்கள் செய்த தீய காரியத்தை உங்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளது. நான் பதற மாட்டேன். அழகிய பொறுமையை மேற்கொள்வேன். யூஸுஃபைக்குறித்து நீங்கள் கூறும் விஷயத்திற்கு நான் அல்லாஹ்விடமே உதவி தேடுகிறேன்.