×
يوسفவசனம் 19

அல்-முக்தஸர்

وَجَآءَتْ سَيَّارَةٌ فَأَرْسَلُوا۟ وَارِدَهُمْ فَأَدْلَىٰ دَلْوَهُۥ ۖ قَالَ يَـٰبُشْرَىٰ هَـٰذَا غُلَـٰمٌ ۚ وَأَسَرُّوهُ بِضَـٰعَةً ۚ وَٱللَّهُ عَلِيمٌۢ بِمَا يَعْمَلُونَ ﴿١٩﴾

கடந்து செல்லக்கூடிய ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தண்ணீரைத் தேடி ஒருவரை அனுப்பினார்கள். அவர் தம் வாளியைக் கிணற்றில் போட்டார். யூஸுஃப் அந்த கயிற்றைப் பிடித்துத் தொங்கினார். வாளியைப் போட்டவர் யூஸுஃபைக் கண்ட போது மகிழ்ச்சியில் கூறினார்: “நற்செய்தி! இதோ ஒரு சிறுவன்.” தண்ணீர் தேடிப் போனவரும் அவருடைய சில தோழர்களும் அவரை தங்களின் வியாபாரப் பொருளாகக் கருதி மற்றவர்களிடமிருந்து மறைத்துக் கொண்டார்கள். அவர்கள் யூஸுஃபை அற்பமாகக் கருதி விற்றுவிடுவார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன். அவர்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.