×
يوسفவசனம் 40

அல்-முக்தஸர்

مَا تَعْبُدُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ أَسْمَآءً سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَـٰنٍ ۚ إِنِ ٱلْحُكْمُ إِلَّا لِلَّهِ ۚ أَمَرَ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّآ إِيَّاهُ ۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلْقَيِّمُ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ ﴿٤٠﴾

நீங்களும் உங்கள் முன்னோர்களும் தெய்வங்களாக தாமாகவே பெயர் சூட்டிக்கொண்டவைகளையே நீங்கள் வணங்குகிறீர்கள். வணக்கத்தில் அவைகளுக்கு எவ்வித பங்கும் இல்லை. அந்த பெயர்கள் சரியானவை என்பதற்கு அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. எல்லா படைப்புகளின் விஷயத்திலும் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. நீங்களும் உங்கள் முன்னோர்களும் வைத்துக் கொண்ட பெயர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. வணக்கங்களில் அவனை ஒருமைப்படுத்துமாறு ஏவியுள்ளான். அவனுக்கு யாரையும் இணையாக்குவதை தடைசெய்துள்ளான். இந்த ஓரிறைக்கொள்கையே எவ்வித கோணலுமற்ற நேரான மார்க்கமாகும். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர் இதனை அறிவதில்லை. எனவேதான் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கி அவனுடைய படைப்புகளில் சிலவற்றை வணங்குகிறார்கள்.