×
يوسفவசனம் 41

அல்-முக்தஸர்

يَـٰصَـٰحِبَىِ ٱلسِّجْنِ أَمَّآ أَحَدُكُمَا فَيَسْقِى رَبَّهُۥ خَمْرًا ۖ وَأَمَّا ٱلْـَٔاخَرُ فَيُصْلَبُ فَتَأْكُلُ ٱلطَّيْرُ مِن رَّأْسِهِۦ ۚ قُضِىَ ٱلْأَمْرُ ٱلَّذِى فِيهِ تَسْتَفْتِيَانِ ﴿٤١﴾

சிறையில் இருக்கும் எனது இரு தோழர்களே! மதுபானம் தயாரிக்க திராட்சை ரசம் பிழிவதாக கனவு கண்டவர் சிறையிலிருந்து விடுபட்டு தம் பணிக்குத் திரும்பி, அரசனுக்கு மது ஊற்றிக் கொடுப்பார். தம் தலையில் ரொட்டியை சுமந்து கொண்டு, அதை பறவைகள் கொத்தித் தின்பதாக கனவு கண்டவர் கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்படுவார். அவர் தலை மாமிசத்தை பறவைகள் கொத்தித் தின்னும். நீங்கள் தீர்ப்புக் கூறுமாறு கேட்ட விடயம் தீர்மானிக்கப்பட்டு முடிந்து விட்டது. சந்தேகமின்றி இது நிகழ்ந்தே தீரும்.