அல்-முக்தஸர்
وَقَالَ لِلَّذِى ظَنَّ أَنَّهُۥ نَاجٍ مِّنْهُمَا ٱذْكُرْنِى عِندَ رَبِّكَ فَأَنسَىٰهُ ٱلشَّيْطَـٰنُ ذِكْرَ رَبِّهِۦ فَلَبِثَ فِى ٱلسِّجْنِ بِضْعَ سِنِينَ ﴿٤٢﴾
இருவரில் விடுதலையடைவார் என்று எண்ணியவரிடம் -அரசனுக்கு மது ஊற்றிக்கொடுப்பவர்- யூஸுஃப் கூறினார்: “அரசனிடம் என்னைப் பற்றி எடுத்துக் கூறுவீராக. அதனால் அவர் சிறையிலிருந்து என்னை விடுவிக்கலாம். அரசனிடம் யூஸுஃபைக் குறித்துக் கூறுவதை விட்டும் ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான். எனவே அதன் பின்னர் யூஸுஃப் பல வருடங்கள் சிறையில் கழித்தார்.