அல்-முக்தஸர்
وَمَآ أُبَرِّئُ نَفْسِىٓ ۚ إِنَّ ٱلنَّفْسَ لَأَمَّارَةٌۢ بِٱلسُّوٓءِ إِلَّا مَا رَحِمَ رَبِّىٓ ۚ إِنَّ رَبِّى غَفُورٌ رَّحِيمٌ ﴿٥٣﴾
அரசரின் மனைவி தொடர்ந்து கூறினாள்: “நான் என் மனதில் தீய எண்ணம் கொள்ளவில்லை என்று கூறமாட்டேன். இதன் மூலம் என்னைப் பரிசுத்தப்படுத்தவும் நான் விரும்பவில்லை. ஏனெனில் மனித மனம் தான் விரும்புவற்றின் பால் சாய்வதனாலும் அதனைத் தடுத்துக் கொள்வது சிரமம் என்பதாலும் தீயவற்றை அதிகமாக ஏவுதல் அதன் இயல்பாகும். தீயவற்றை ஏவுவதை விட்டும் அதனைப் பாதுகாத்து அல்லாஹ் அருள்புரிந்தவர்களைத் தவிர. தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.