×
يوسفவசனம் 54

அல்-முக்தஸர்

وَقَالَ ٱلْمَلِكُ ٱئْتُونِى بِهِۦٓ أَسْتَخْلِصْهُ لِنَفْسِى ۖ فَلَمَّا كَلَّمَهُۥ قَالَ إِنَّكَ ٱلْيَوْمَ لَدَيْنَا مَكِينٌ أَمِينٌ ﴿٥٤﴾

யூஸுஃப் நிரபராதி, அறிவாளி என்பது தெளிவாகி அதனை அறிந்துகொண்ட பின்னர் அரசர் தம் உதவியாளர்களிடம் கூறினார்: “அவரை அழைத்து வாருங்கள். அவரை நான் எனக்காக வைத்துக் கொள்கிறேன்.” அவர் அழைத்து வரப்பட்டார். அரசர் அவரிடம் பேசிய போது அவருடைய அறிவையும் ஞானத்தையும் அறிந்து கொண்டார். அவரிடம் கூறினார்: -“யூஸுஃபே!- நிச்சயமாக இன்றைய தினம் நீர் எங்களிடம் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் பதவியுடையவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் ஆகிவிட்டீர்.”