×
يوسفவசனம் 64

அல்-முக்தஸர்

قَالَ هَلْ ءَامَنُكُمْ عَلَيْهِ إِلَّا كَمَآ أَمِنتُكُمْ عَلَىٰٓ أَخِيهِ مِن قَبْلُ ۖ فَٱللَّهُ خَيْرٌ حَـٰفِظًا ۖ وَهُوَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ ﴿٦٤﴾

அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “இதற்கு முன்னால் இவரது சகோதரர் யூஸுஃபின் விஷயத்தில் உங்களை நம்பியதைப் போன்றல்லாது இவர் விஷயத்தில் உங்களை நான் நம்ப வேண்டுமா? அவர் விடயத்தில் உங்களை நான் நம்பினேன். நீங்கள் அவரைப் பாதுகாப்பதாக எனக்கு வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் உங்களின் வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றவில்லை. எனவே இவரைப் பாதுகாப்பதாக நீங்கள் அளிக்கும் வாக்குறுயில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் அல்லாஹ்வையே நம்புகிறேன். அவனே தான் பாதுகாக்க நாடியவர்களை சிறந்த முறையில் பாதுகாக்கக் கூடியவன்; தான் நாடியவர்களுக்கு கருணை காட்டுவதில் மிகச் சிறந்தவன்.