அல்-முக்தஸர்
وَلَمَّا فَتَحُوا۟ مَتَـٰعَهُمْ وَجَدُوا۟ بِضَـٰعَتَهُمْ رُدَّتْ إِلَيْهِمْ ۖ قَالُوا۟ يَـٰٓأَبَانَا مَا نَبْغِى ۖ هَـٰذِهِۦ بِضَـٰعَتُنَا رُدَّتْ إِلَيْنَا ۖ وَنَمِيرُ أَهْلَنَا وَنَحْفَظُ أَخَانَا وَنَزْدَادُ كَيْلَ بَعِيرٍ ۖ ذَٰلِكَ كَيْلٌ يَسِيرٌ ﴿٦٥﴾
அவர்கள் தாங்கள் கொண்டு வந்த தங்களின் உணவுப் பையை திறந்த போது அதற்கான விலைப் பொருட்கள் தங்களிடமே திருப்பி அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் தங்கள் தந்தையிடம் கூறினார்கள்: “இந்த அளவு கண்ணியம் அளித்த பிறகு இந்த அரசரிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்க முடியும்? உணவுப் பொருள்களைப் பெறுவதற்காக நாம் அளித்த விலையை அரசர் நம்மீது கொண்ட அருளினால் நமக்குத் திருப்பித் தந்துள்ளார். நாங்கள் எங்கள் குடும்பத்தாருக்கும் உணவு கொண்டு வருவோம். நீங்கள் அஞ்சும் விஷயத்திலிருந்து எங்களின் சகோதரரையும் பாதுகாப்போம். அவர் எங்களுடன் வருவதால் ஓர் ஓட்டகம் அளவு தானியத்தையும் அதிகமாகப் பெறுவோம். ஓர் ஒட்டகம் அளவு அதிகமாக தானியம் வழங்குவது அரசருக்கு மிகவும் இலகுவானதுதான்.”