×
يوسفவசனம் 66

அல்-முக்தஸர்

قَالَ لَنْ أُرْسِلَهُۥ مَعَكُمْ حَتَّىٰ تُؤْتُونِ مَوْثِقًا مِّنَ ٱللَّهِ لَتَأْتُنَّنِى بِهِۦٓ إِلَّآ أَن يُحَاطَ بِكُمْ ۖ فَلَمَّآ ءَاتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ ٱللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٌ ﴿٦٦﴾

அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “உங்களால் தவிர்க்க முடியாதளவு ஆபத்து ஏற்பட்டு உங்களில் எவரையும் விட்டுவைக்காமல் நீங்கள் அழிந்தாலே தவிர நீங்கள் அவரை என்னிடம் திரும்ப அழைத்து வருவீர்கள் என்பதற்கு அல்லாஹ்வின் பெயரால் உறுதியான வாக்குறுதி வழங்காதவரை நான் அவரை உங்களுடன் அனுப்ப மாட்டேன். அவர்கள் அல்லாஹ்வின் பெயரால் உறுதியான வாக்குறுதி அளித்த போது அவர் கூறினார்: “நாங்கள் கூறுவதற்கு அல்லாஹ்வே சாட்சியாளனாவான். அவனுடைய சாட்சியமே எங்களுக்குப் போதுமானது.”