×
الرعدவசனம் 26

அல்-முக்தஸர்

ٱللَّهُ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ ۚ وَفَرِحُوا۟ بِٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا فِى ٱلْـَٔاخِرَةِ إِلَّا مَتَـٰعٌ ﴿٢٦﴾

அல்லாஹ் தான் நாடியோருக்கு தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான். தான் நாடிய அடியார்களுக்கு அதனை சுருக்கியும் விடுகிறான். வாழ்வாதாரம் அதிகமாக வழங்கப்படுவது பாக்கியத்தின், இறைநேசத்தின் அடையாளமும் அல்ல. அது குறைவாக வழங்கப்படுவது துர்பாக்கியத்தின் அடையாளமும் அல்ல. நிராகரிப்பாளர்கள் இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டு மகிழ்வுற்று அதன் பக்கம் சாய்ந்து அதனைக் கொண்டு நிம்மதி அடைகின்றனர். மறுமையோடு ஒப்பிடும் போது இவ்வுலகம் அழிந்து விடும் அற்ப இன்பமேயன்றி வேறில்லை.