×
الرعدவசனம் 27

அல்-முக்தஸர்

وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ ءَايَةٌ مِّن رَّبِّهِۦ ۗ قُلْ إِنَّ ٱللَّهَ يُضِلُّ مَن يَشَآءُ وَيَهْدِىٓ إِلَيْهِ مَنْ أَنَابَ ﴿٢٧﴾

அல்லாஹ்வையும் அவனுடைய சான்றுகளையும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்: “நாம் முஹம்மதை நம்புவதற்கு அவரது நம்பகத்தன்மையை எடுத்துரைக்கக்கூடிய ஏதேனும் புலன் ரீதியான ஒரு சான்று அவர் மீது இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? இவ்வாறு கருத்து கூறுபவர்களிடம் -தூதரே- நீர் கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ் தன் நீதியால் தான் நாடியவர்களை வழிகெடுக்கிறான். பாவமன்னிப்பின் மூலம் தன் பக்கம் திரும்பக்கூடியவர்களுக்கு தன் அருளால் நேர்வழிகாட்டுகிறான். அத்தாட்சிகளை இறக்கினால்தான் நேர்வழி பெறுவோம் எனக் கூற நேர்வழியொன்றும் அவர்களின் அதிகாரத்திற்குட்பட்டதல்ல.