×
الرعدவசனம் 32

அல்-முக்தஸர்

وَلَقَدِ ٱسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَأَمْلَيْتُ لِلَّذِينَ كَفَرُوا۟ ثُمَّ أَخَذْتُهُمْ ۖ فَكَيْفَ كَانَ عِقَابِ ﴿٣٢﴾

நீர், தனது சமூகத்தின் நிராகரிப்பும் பரிகாசத்திற்கும் உள்ளாகிய முதலாவது தூதர் அல்ல. -தூதரே!- உமக்கு முன்னிருந்த சமூகங்களும் தமது தூதர்களை பரிகாசம் செய்து நிராகரித்துள்ளார்கள். தூதர்களை நிராகரித்தவர்கள் நான் அவர்களை அழிக்க மாட்டேன் என்று எண்ணுமளவு அவர்களுக்கு நான் அவகாசம் அளித்தேன். அவகாசத்தின் பின்னர் பல்வேறு வேதனைகளால் அவர்களைத் தண்டித்தேன். அவர்களுக்கான எனது தண்டனை எவ்வாறு இருந்தது என்பதை நீர் பார்த்தீரா? அது கடுமையான வேதனையாக இருந்தது.