×
الرعدவசனம் 33

அல்-முக்தஸர்

أَفَمَنْ هُوَ قَآئِمٌ عَلَىٰ كُلِّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ ۗ وَجَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ قُلْ سَمُّوهُمْ ۚ أَمْ تُنَبِّـُٔونَهُۥ بِمَا لَا يَعْلَمُ فِى ٱلْأَرْضِ أَم بِظَـٰهِرٍ مِّنَ ٱلْقَوْلِ ۗ بَلْ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا۟ مَكْرُهُمْ وَصُدُّوا۟ عَنِ ٱلسَّبِيلِ ۗ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍ ﴿٣٣﴾

அனைத்து படைப்பினங்களின் வாழ்வாதரத்தை பாதுகாப்பவனான, ஒவ்வொரு ஆன்மாவும் செய்யும் செயல்களைக் கண்காணித்து அவற்றிற்கேற்ப கூலி வழங்குபவன் வணங்கப்படத் தகுதியானவனா? அல்லது வணக்கத்திற்குத் தகுதியற்ற இந்த சிலைகளா? நிராகரிப்பாளர்கள் அநியாயமாகவும் அபாண்டமாகவும் அவற்றை அல்லாஹ்வுக்கு இணைகளாக ஏற்படுத்திக் கொண்டார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் உங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் வணங்கும் இணை தெய்வங்களின் பெயர்களைக் குறிப்பிடுங்கள் அல்லது பூமியில் அல்லாஹ் அறியாத இணைகளை நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? அல்லது உண்மையற்ற வெறும் வார்த்தைகளை அவனிடம் கூறுகிறீர்களா? மாறாக ஷைத்தான் நிராகரிப்பாளர்களின் தீய திட்டங்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளான். எனவே அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்தார்கள். நேர்வழியை விட்டும் அவர்களைத் திருப்பி விட்டான். யாரை அல்லாஹ் நேரான பாதையை விட்டும் வழிதவறச் செய்துவிட்டானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் யாரும் இல்லை.