அல்-முக்தஸர்
وَٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ يَفْرَحُونَ بِمَآ أُنزِلَ إِلَيْكَ ۖ وَمِنَ ٱلْأَحْزَابِ مَن يُنكِرُ بَعْضَهُۥ ۚ قُلْ إِنَّمَآ أُمِرْتُ أَنْ أَعْبُدَ ٱللَّهَ وَلَآ أُشْرِكَ بِهِۦٓ ۚ إِلَيْهِ أَدْعُوا۟ وَإِلَيْهِ مَـَٔابِ ﴿٣٦﴾
தூதரே!- நாம் தவ்ராத்தை வழங்கிய யூதர்களும் இன்ஜீலை வழங்கிய கிறிஸ்தவர்களும் உம்மீது இறக்கப்பட்டதைக் கொண்டு அது அவர்களுக்கு இறக்கப்பட்ட சிலவற்றுடன் ஒத்துப் போவதால் மகிழ்ச்சியடைகிறார்கள். யூதர்களிலும் கிறிஸ்தவர்களிலும் சிலர் அவர்களின் மன இச்சையோடு ஒத்துப் போகாத அல்லது திரிபுபடுத்தியாக அவர்களை வர்ணிக்கும் உமக்கு இறக்கப்பட்ட சிலவற்றை நிராகரிக்கிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நான் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்றும் அவனுக்கு யாரையும் இணையாக்கக் கூடாது என்றும் அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். அவன் பக்கமே நான் அழைக்கின்றேன். வேறு யாரையும் நான் அழைக்க மாட்டேன். அவனிடமே நான் திரும்ப வேண்டும். இதைக் கொண்டுதான் தவ்ராத்தும் இன்ஜீலும் வந்தன.