அல்-முக்தஸர்
مَّثَلُ ٱلْجَنَّةِ ٱلَّتِى وُعِدَ ٱلْمُتَّقُونَ ۖ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۖ أُكُلُهَا دَآئِمٌ وَظِلُّهَا ۚ تِلْكَ عُقْبَى ٱلَّذِينَ ٱتَّقَوا۟ ۖ وَّعُقْبَى ٱلْكَـٰفِرِينَ ٱلنَّارُ ﴿٣٥﴾
அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அவன் வாக்களித்த சுவனத்தின் தன்மையானது, அதன் மாளிகைகளுக்கும், மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். சுவர்க்கத்தின் பழங்கள் உலகத்தில் இருக்கும் பழங்களை போல் அல்லாமல் என்றும் முடிவடையாதது. அதன் நிழல்கள் நிலையானது, அகன்று விடாதது, குறையாதது. இந்த முடிவு அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கே ஆகும். நிராகரிப்பாளர்களின் இறுதி முடிவு நரகமேயாகும். அங்கு நிரந்தரமாக அவர்கள் நுழைவார்கள்.