அல்-முக்தஸர்
وَيَسْتَعْجِلُونَكَ بِٱلسَّيِّئَةِ قَبْلَ ٱلْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِن قَبْلِهِمُ ٱلْمَثُلَـٰتُ ۗ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِّلنَّاسِ عَلَىٰ ظُلْمِهِمْ ۖ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ ٱلْعِقَابِ ﴿٦﴾
தூதரே!- இணைவைப்பாளர்கள் தண்டனையை விரைவாகக் கொண்டுவரும்படி உம்மை அவசரப்படுத்துகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு விதித்த அருட்கொடைகளை முழுமையாக அனுபவிக்க முன்னரே அவர்கள் மீது தண்டனை இறங்காமலிருப்பதை தாமதமாகக் கருதுகிறார்கள். அவர்களுக்கு முன்னர் அவர்களைப் போன்று நிராகரித்த சமூகங்களுக்கு தண்டனைகள் ஏற்பட்டுள்ளன. ஏன் அவர்கள் அவற்றைக் கொண்டு படிப்பினை பெறுவதில்லை? -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் மக்கள் அநீதி இழைத்த போதிலும் அவர்களை மன்னிக்கக் கூடியவன். எனவே அவர்கள் அவனிடம் தவ்பா செய்து மீள வேண்டும் என்பதற்காக அவர்களை உடனுக்குடன் தண்டிப்பதில்லை. பாவமன்னிப்புக் கோராமல் நிராகரிப்பில் நிலைத்திருப்பவர்களைத் தண்டிப்பதில் அவன் கடுமையானவன்.