×
الرعدவசனம் 7

அல்-முக்தஸர்

وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ ءَايَةٌ مِّن رَّبِّهِۦٓ ۗ إِنَّمَآ أَنتَ مُنذِرٌ ۖ وَلِكُلِّ قَوْمٍ هَادٍ ﴿٧﴾

அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் -பிடிவாதத்திலும் புறக்கணிப்பிலும் நிலைத்தவர்களாகக்- கூறுகிறார்கள்: “மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் வழங்கப்பட்டது போன்று முஹம்மது மீதும் அவருடைய இறைவனிடமிருந்து ஒரு சான்று இறக்கப்பட வேண்டாமா?” -தூதரே!- நீர் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து மக்களை எச்சரிக்கை செய்யும் ஒரு எச்சரிக்கையாளர்தான். அல்லாஹ் உமக்கு வழங்கிய சான்றுகளைத் தவிர உம்மிடம் எந்த சான்றுகளும் இல்லை. ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய ஒரு தூதர் இருக்கின்றார். அதன்படி அவர்களை வழிகாட்டுவார்.