×
الرعدவசனம் 8

அல்-முக்தஸர்

ٱللَّهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ أُنثَىٰ وَمَا تَغِيضُ ٱلْأَرْحَامُ وَمَا تَزْدَادُ ۖ وَكُلُّ شَىْءٍ عِندَهُۥ بِمِقْدَارٍ ﴿٨﴾

ஒவ்வொரு பெண்ணும் தன் வயிற்றில் சுமப்பதையும் அது குறித்து ஒவ்வொன்றையும் அல்லாஹ் அறிகிறான். கர்ப்பப்பைகளில் நிகழும் கூடுதல், குறைவு, ஆரோக்கியம், சுகவீனம் ஆகிய அனைத்தையும் அவன் அறிகிறான். ஒவ்வொன்றும் அவனிடம் அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனை விட கூடுவதுமில்லை, குறைவதுமில்லை.