அல்-முக்தஸர்
قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ إِن نَّحْنُ إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ وَلَـٰكِنَّ ٱللَّهَ يَمُنُّ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ وَمَا كَانَ لَنَآ أَن نَّأْتِيَكُم بِسُلْطَـٰنٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ ﴿١١﴾
அவர்களின் தூதர் அவர்களுக்கு மறுப்புக் கூறினார்கள்: “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம். இதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் எல்லா விஷயங்களிலும் நாங்கள் உங்களைப் போன்று இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு பிரத்யேகமான அருளை வழங்கி, அவர்களை மக்களுக்குத் தூதர்களாகத் தேர்ந்தெடுக்கிறான். அல்லாஹ்வின் நாட்டமின்றி நீங்கள் வேண்டும் ஆதாரங்களை எங்களால் கொண்டுவர முடியாது. அதற்கு எமக்கு ஆற்றலும் இல்லை. மாறாக அல்லாஹ் மட்டுமே அதற்கு ஆற்றலுடையவன். அவனை நம்பிக்கை கொண்டோர் தங்களின் எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.