×
إبراهيمவசனம் 10

அல்-முக்தஸர்

قَالَتْ رُسُلُهُمْ أَفِى ٱللَّهِ شَكٌّ فَاطِرِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ يَدْعُوكُمْ لِيَغْفِرَ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرَكُمْ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى ۚ قَالُوٓا۟ إِنْ أَنتُمْ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا تُرِيدُونَ أَن تَصُدُّونَا عَمَّا كَانَ يَعْبُدُ ءَابَآؤُنَا فَأْتُونَا بِسُلْطَـٰنٍ مُّبِينٍ ﴿١٠﴾

அவர்களின் தூதர்கள் அவர்களுக்கு மறுப்புக் கூறினார்கள்: “அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்திருக்கும் நிலையில், அவனை மட்டுமே வணக்கத்தில் ஏகத்துவப்படுத்த வேண்டும் என்பதிலும் சந்தேகமா? உங்களின் முந்தைய பாவங்களை மன்னிப்பதற்காகவும் உங்களது உலக வாழ்வில் குறிக்கப்பட்ட உங்கள் தவணைகளைப் பூர்த்தி செய்யும் வரை உங்களுக்கு அவகாசம் அளிக்கவும், தன்னை நம்பிக்கை கொள்ளுமாறு உங்களை அவன் அழைக்கின்றான்.” அவர்களின் சமூகத்தினர் அவர்களிடம் கூறினார்கள்: “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள்தாம். எங்களை விட உங்களுக்கு எந்த சிறப்பும் இல்லை. எங்கள் முன்னோர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களை திசைதிருப்பப் பார்க்கிறீர்கள். “நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமிருந்து எங்களின் பக்கம் அனுப்பப்பட்ட தூதர்கள்” என்ற உங்கள் கூற்றில் உண்மையாளர்கள் என்பதற்கான தெளிவான ஆதாரத்தை எங்களிடம் கொண்டு வாருங்கள்.”