×
إبراهيمவசனம் 9

அல்-முக்தஸர்

أَلَمْ يَأْتِكُمْ نَبَؤُا۟ ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ ۛ وَٱلَّذِينَ مِنۢ بَعْدِهِمْ ۛ لَا يَعْلَمُهُمْ إِلَّا ٱللَّهُ ۚ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَـٰتِ فَرَدُّوٓا۟ أَيْدِيَهُمْ فِىٓ أَفْوَٰهِهِمْ وَقَالُوٓا۟ إِنَّا كَفَرْنَا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ وَإِنَّا لَفِى شَكٍّ مِّمَّا تَدْعُونَنَآ إِلَيْهِ مُرِيبٍ ﴿٩﴾

நிராகரிப்பாளர்களே!- உங்களுக்கு முன்னர் நிராகரித்த நூஹின் சமூகம், ஹூத் உடைய சமூகம் ஆத், ஸாலிஹின் சமூகம், ஸமூத் மற்றும் அவர்களுக்குப் பின்னால் வந்த சமூகங்கள் அவற்றின் எண்ணிக்கையை அல்லாஹ் மட்டுமே நன்கறிவான் - ஆகியவை அழிக்கப்பட்ட செய்தி உங்களிடம் வரவில்லையா? அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் தங்கள் தூதர்களின் மீதுள்ள வெறுப்பினால் தமது கரங்களை வாயிலிட்டு விரல்களைக் கடித்துக் கொண்டனர். மேலும் தங்களின் தூதர்களிடம் கூறினார்கள்: “நீங்கள் கொண்டு வந்ததை நாங்கள் நிராகரித்து விட்டோம். நீங்கள் எங்களை அழைக்கும் விஷயத்தில் நாங்கள் கடும் சந்தேகத்தில் இருக்கின்றோம்.”