அல்-முக்தஸர்
مِّن وَرَآئِهِۦ جَهَنَّمُ وَيُسْقَىٰ مِن مَّآءٍ صَدِيدٍ ﴿١٦﴾
மறுமையில் இந்த கர்வம் கொண்டவர்களுக்கு முன்னால் நரகமே இருக்கின்றது. அது அவர்களுக்காக காத்திருக்கின்றது. அங்கு நரகவாசிகளின் உடல்களிலிருந்து வழியும் சீழ்களிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். அது அவர்களின் தாகத்தை தணிக்காது. தாகத்தாலும் இன்னபிற வேதனைகளாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்.