அல்-முக்தஸர்
يَتَجَرَّعُهُۥ وَلَا يَكَادُ يُسِيغُهُۥ وَيَأْتِيهِ ٱلْمَوْتُ مِن كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ ۖ وَمِن وَرَآئِهِۦ عَذَابٌ غَلِيظٌ ﴿١٧﴾
அதன் கசப்பு, சூடு, துர்நாற்றம் ஆகியவற்றின் காரணமாக தொடராக அதனைப் பருகுவதற்கு சிரமப்படுவார்கள். அவர்களால் அதனை விழுங்க முடியாது. அவர்களை சுற்றி காணப்படும் கடுமையான வேதனையினால், மரணம் எல்லா புறங்களிலிருந்தும் அவர்களை வந்தடையும். அவன் ஓய்வு பெறுவதற்கு மரணிக்கவும் மாட்டான். மாறாக உயிரோடு இருந்து வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பான். அவனுக்கு முன்னால் வேறொரு கடுமையான வேதனையும் காத்திருக்கின்றது.