×
إبراهيمவசனம் 32

அல்-முக்தஸர்

ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَخْرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزْقًا لَّكُمْ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلْفُلْكَ لِتَجْرِىَ فِى ٱلْبَحْرِ بِأَمْرِهِۦ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلْأَنْهَـٰرَ ﴿٣٢﴾

அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தான். -மனிதர்களே!- உங்களுக்கு வாழ்வாதாரமாக அமையும் பொருட்டு வானத்திலிருந்து மழையை இறக்கி அதன் மூலம் பல்வேறு வகையான பழங்களை வெளிப்படுத்துகிறான். அவன்தான் அவனுடைய ஏற்பாட்டின் மூலம் நீரில் செல்லக்கூடிய கப்பல்களையும் நீங்கள் நீர் அருந்துவதற்காகவும் உங்கள் கால்நடைகளுக்கு நீர்ப் புகட்டுவதற்காகவும் உங்கள் பயிர்களுக்கு நீர்பாய்ச்சுவதற்காகவும் ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான்.