அல்-முக்தஸர்
وَسَخَّرَ لَكُمُ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ دَآئِبَيْنِ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ ﴿٣٣﴾
அவனே சூரியனையும் சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இரவையும் பகலையும் பின்தொடர்ந்துவரக்கூடியதாக உங்களுக்கு ஆக்கித் தந்துள்ளான். இரவை நீங்கள் உறங்குவதற்காகவும் ஓய்வெடுப்பதற்காகவும் பகலை உங்கள் செயல்பாட்டுக்காகவும் தொழிலுக்காகவும் அவன் ஆக்கித் தந்துள்ளான்.