அல்-முக்தஸர்
وَقَدْ مَكَرُوا۟ مَكْرَهُمْ وَعِندَ ٱللَّهِ مَكْرُهُمْ وَإِن كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ ٱلْجِبَالُ ﴿٤٦﴾
முன்னர் அநியாயக்கார சமூகங்கள் வாழ்ந்த வசிப்பிடங்களில் வசிக்கும் இவர்கள் முஹம்மது நபியைக் கொல்வதற்கும், அவருடைய அழைப்புப் பணியை நிறுத்துவதற்கும் இரகசியமாகத் திட்டம் தீட்டினார்கள். அவர்களின் இரகசியத் திட்டங்களை அல்லாஹ் அறிவான். அதில் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. இவர்களின் திட்டம் பலவீனமானது. அதன் பலவீனத்தினால் மலைகளையோ எனையவற்றையோ அது அகற்றாது. ஆனால் அல்லாஹ் அவர்களுக்குச் செய்யும் சூழ்ச்சி அதற்கு மாற்றமானது.