×
إبراهيمவசனம் 47

அல்-முக்தஸர்

فَلَا تَحْسَبَنَّ ٱللَّهَ مُخْلِفَ وَعْدِهِۦ رُسُلَهُۥٓ ۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ ذُو ٱنتِقَامٍ ﴿٤٧﴾

தூதரே!- அல்லாஹ் தன் மார்க்கத்தை மேலோங்கச் செய்வதாக தன் தூதர்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்படுவான் என்று ஒருபோதும் நீர் எண்ணிவிடாதீர். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைத்துவிட முடியாது. அவன் தன் நேசர்களை மேலோங்கச் செய்கிறான். தன் எதிரிகளையும் தனது தூதர்களின் எதிரிகளையும் கடுமையாக பழி தீர்ப்பவன்.