×
النحلவசனம் 123

அல்-முக்தஸர்

ثُمَّ أَوْحَيْنَآ إِلَيْكَ أَنِ ٱتَّبِعْ مِلَّةَ إِبْرَٰهِيمَ حَنِيفًا ۖ وَمَا كَانَ مِنَ ٱلْمُشْرِكِينَ ﴿١٢٣﴾

பின்னர் -தூதரே!- ஏகத்துவத்திலும் இணைவைப்பாளர்களை விட்டும் விலகிக்கொள்வதிலும் அல்லாஹ்வின் பக்கம் அழைத்து அவனது மார்க்கத்தின் படி செயற்படுவதிலும் இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக என்று உமக்கு வஹி அறிவித்தோம். எல்லா மார்க்கங்களையும் விட்டு விலகி இஸ்லாத்தின்பால் முற்றிலும் சாய்ந்தவராக அதனைப் பின்பற்றுவீராக. இணைவைப்பாளர்கள் கூறுவதுபோல அவர் ஒருபோதும் இணைவைப்பாளராக இருந்ததில்லை. மாறாக அல்லாஹ் ஒருவனையே வணங்கக்கூடியவராக இருந்தார்.