அல்-முக்தஸர்
إِنَّمَا جُعِلَ ٱلسَّبْتُ عَلَى ٱلَّذِينَ ٱخْتَلَفُوا۟ فِيهِ ۚ وَإِنَّ رَبَّكَ لَيَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ ﴿١٢٤﴾
சனிக்கிழமையைக் கண்ணியப்படுத்துவது அதில் கருத்து வேறுபட்ட யூதர்கள் மீதே கடமையாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தமது தொழில்களில் இருந்து ஒதுங்கி வணக்கவழிபாடுகளில் ஈடுபடுமாறு ஏவப்பட்டிருந்த வெள்ளிக் கிழமையை அவர்கள் தவறவிட்டதனால் சனிக்கிழமையில் தமது தொழில்களை விட்டுவிட்டு வணக்கவழிபாடுகளில் ஈடுபட வேண்டும் என்பதற்கே அது கடமையாக்கப்பட்டது. -தூதரே!- நிச்சயமாக மறுமை நாளில் உம் இறைவன் கருத்து வேறுபட்டவர்களிடையே, அவர்கள் எதில் கருத்து வேறுபட்டார்களோ அவற்றில் அவன் தீர்ப்பளிப்பான். ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்குவான்.