அல்-முக்தஸர்
ٱدْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلْحِكْمَةِ وَٱلْمَوْعِظَةِ ٱلْحَسَنَةِ ۖ وَجَـٰدِلْهُم بِٱلَّتِى هِىَ أَحْسَنُ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ ۖ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ ﴿١٢٥﴾
தூதரே!- நீரும் உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களும் இஸ்லாம் என்னும் மார்க்கத்தின் பக்கம் அழைப்பு விடுக்கப்படுபவரின் புரிதல், கட்டுப்படுதல் மற்றும் சூழ்நிலைக்கேற்பவும், அச்சமூட்டுதல், ஆர்வமூட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவுரையைக்கொண்டும் மக்களை அழையுங்கள். அவர்களுடன் அழகிய வார்த்தை, சிந்தனை, ஒழுக்கம் உடைய முறையில் விவாதம் செய்யுங்கள். மக்களை நேர்வழியில் செலுத்துவது உமது பணியல்ல. அவர்களுக்கு எடுத்துரைப்பதே உம்மீதுள்ள பணியாகும். நிச்சயமாக இஸ்லாம் என்னும் மார்க்கத்தை விட்டு வழிதவறியவர்களையும் நேர்வழியில் உள்ளவர்களையும் உம் இறைவன் நன்கறிவான். அவர்களுக்காக நீர் கவலைப்படாதீர்.