×
النحلவசனம் 43

அல்-முக்தஸர்

وَمَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ إِلَّا رِجَالًا نُّوحِىٓ إِلَيْهِمْ ۚ فَسْـَٔلُوٓا۟ أَهْلَ ٱلذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ ﴿٤٣﴾

தூதரே!- உமக்கு முன்னர் நாம் மனிதர்களில் ஆண்களையே தூதர்களாக்கி அவர்களுக்கு வஹி அறிவித்தோம். வானவர்களை நாம் தூதர்களாக அனுப்பவில்லை. இதுதான் நம்முடைய வழமையான வழிமுறை. நீங்கள் இதனை மறுப்பவர்களாக இருந்தால், அவர்கள் மனிதர்களாகத்தான் இருந்தார்கள் என்பதை அறியாதவர்களாக இருந்தால் முன்னர் வேதம் வழங்கப்பட்டோரிடம் கேட்டுப் பாருங்கள். தூதர்கள் மனிதர்களாகத்தான் இருந்தார்கள், வானவர்களாக இருக்கவில்லை என்பதை அவர்கள் உங்களுக்கு அறிவிப்பார்கள்.