அல்-முக்தஸர்
بِٱلْبَيِّنَـٰتِ وَٱلزُّبُرِ ۗ وَأَنزَلْنَآ إِلَيْكَ ٱلذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ ﴿٤٤﴾
மனிதர்களிலுள்ள இந்த தூதர்களை நாம் தெளிவான ஆதாரங்களைக் கொண்டும் இறக்கப்பட்ட வேதங்களைக் கொண்டும் அனுப்பினோம். -தூதரே!- குர்ஆனில் விளக்கம் தேவையானவற்றை நீங்கள் விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் தமது சிந்தனையைச் செயற்படுத்தி, அதிலுள்ளவற்றின் மூலம் அறிவுரை பெற வேண்டும் என்பதற்காகவும் நாம் உம் மீது அதனை இறக்கியுள்ளோம்.